'ஒரு காலத்தில் படிப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பின்னால் இருந்த வலி இப்போது தெரிய வேண்டும்'; கனிமொழி எம்.பி...!
MP Kanimozhi says that the pain of being denied education in the past should be understood now
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார். இந்திய 'தமிழால் இணைவோம், தரணியை வெல்வோம்' விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
செழுமையான பாரம்பரியத்தையும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் மொழியாகவும் இருந்தபோதிலும், தமிழ் போன்ற செம்மொழிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்குவதில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிகழ்வே உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், தங்கள் தாய்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வசித்தாலும், தமிழர்கள் தங்கள் மொழியையும் அடையாளத்தையும் பாதுகாத்து வருவதைக் காண்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு காலத்தில் படிப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பின்னால் இருந்த வலி இப்போது தெரிய வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். உலக தமிழர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நிகழ்ச்சி நடக்கிறதாகவும், அயலகத் தமிழர் நாளை சிறப்பாக கொண்டாடுகிறோம் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு அவர் நினைவுப் பரிசுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
MP Kanimozhi says that the pain of being denied education in the past should be understood now