பணியிடத்தில் கண்ணை உருட்டி முறைத்தது பணியிட கொடுமை: சக செவிலியர் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நடுவர் மன்றம் தீர்ப்பு..!
A jury ruled that a fellow nurse should pay Rs 30 lakh in compensation saying that eye rolling and staring constituted workplace harassment
பணியிடங்களில் சக ஊழியர்களால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் கொடுமைப்படுத்துதல் உலகெங்கிலும் பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. அதாவது, வார்த்தைகளால் திட்டுவது, உடல் ரீதியாகத் தாக்குத்தல், முகபாவனைகள் மற்றும் செய்கைகள் மூலமும் ஒருவரை அவமதிப்பது குற்றமாகும்.
அந்த வகையில், இங்கிலாந்தின் எடின்பரோ நகரில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்த மூத்த செவிலியர் மவ்ரீன் ஹோவிசன் (64) என்பவர், தன்னுடன் பணியாற்றிய சக செவிலியர் ஜிஸ்னா இக்பால் என்பவர் தன்னைத் தொடர்ந்து கண்ணை உருட்டி முறைப்பதன் மூலமும், இழிவுபடுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகப் பணியாளர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், கண்ணை உருட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும், பணியிடக் கொடுமைதான் என ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க குற்றம் சாட்டப்பட்ட ஜிஸ்னா இக்பாலுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, ஒருவரின் சிறிய முகபாவனைகள் கூட கொடுமையான பணிச்சூழலை உருவாக்கி, சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்தத் தீர்ப்பு முக்கியச் சான்றாக அமைந்துள்ளது.
English Summary
A jury ruled that a fellow nurse should pay Rs 30 lakh in compensation saying that eye rolling and staring constituted workplace harassment