மழை தான்... மகிழ்ச்சி தான்! கொடைக்கானலில் மழையில் கூட அட்ராசிட்டி செய்யும் சுற்றுலாப்பயணிகள்...!
Tourists commit atrocities even rain Kodaikanal
“மலைகளின் இளவரசி” என அழைக்கப்படும் கொடைக்கானல், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா சொர்க்கமாக மாறியது. அங்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா,வெளிநாடுகள் என பல இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.இதில் நேற்று மதியம் முதல் பெய்த மழை கூட மக்களின் உற்சாகத்தை தணிக்கவில்லை.

இந்நிலையிலும், குடைபிடித்தும், மழையில் நனைந்தும் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியைச் சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டு, படகு சவாரியில் உற்சாகத்தில் இருந்தனர். மேலும், ஏரிச்சாலையில் சைக்கிள் ஓட்டமும், குதிரை சவாரியும் அவர்களை சிறுவர்களைப் போலக் களிப்படைய வைத்தது.
அதுமட்டுமின்றி,வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், பைன் காடு, ராஜா பூங்கா,பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா போன்ற புகழ்பெற்ற இடங்கள் அனைத்தும் பரபரப்பான கூட்டத்தால் நிரம்பின.இதோடு மட்டுமல்லாமல், கொடைக்கானலில் தொடங்கிய நாய் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதில் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா,கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வருகை தந்த 40-க்கும் மேற்பட்ட நாய் வகைகள் – ஜாக்ரசல் பேஷன்சி, ராஜபாளையம், கன்னி,பாஷான் பிரிஸ், ஆஸ்திரேலிய செப்பேடு, டெரியர், கெய்ன் கார்ஷோ, அமெரிக்கன் ஸ்டாப்ட், பர்னிஷ் மவுண்டன், பொம்மேரியன், மேலும் தமிழ்நாட்டின் பெருமை சிப்பிபாறை ஆகியவை பங்கேற்றன.
மேலும், நாய்களின் கட்டுப்பாடு, குணாதிசயம், பராமரிப்பு திறமைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை சென்று எழும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை, சூழல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களை ரசித்தனர்.
அங்கு கிடைக்கும் மருத்துவ குணம் மிக்க வெள்ளைப்பூண்டு, கேரட் போன்ற பசுமையான காய்கறிகளையும் வாங்கிச் சென்றனர்.மேலும்,மழை, பசுமை, அருவிகள், ஏரிகள், விலங்குகள், வண்ணமயமான நாய் கண்காட்சி என கொடைக்கானல் வார இறுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவுகளை பரிசளித்தது.
English Summary
Tourists commit atrocities even rain Kodaikanal