கோதுமை காரபோண்டா...! உடல் ஆரோக்கியம், எளிய வழியில்....!
wheat kaarabonda
கோதுமை கார போண்டா
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கோதுமை மாவு - அரை கிலோ
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 7(நறுக்கியது)
கறிவேப்பிலை - 3 கொத்து (நறுக்கியது)

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சமையல் சோடா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அனைத்தையும் பிசைய வேண்டும். ஓரளவிற்கு கெட்டியாக இருக்குமாறு பிசைந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமானது எடுத்து விடவும்.