கம்பு வெந்தயக்கீரை ரொட்டி...! உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் superfood ரொட்டி!
kambu vendhaya keerai rotti
கம்பு வெந்தயக்கீரை ரொட்டி
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
கம்பு மாவு - கால் கிலோ
வெந்தயக் கீரை - அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
சீரகம் - கால் டீஸ்பூன்
ஓமம் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - கால் டேபிள் ஸ்பூன்
தயிர் - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவேண்டும்.உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவேண்டும். மேலே வெண்ணெய் தடவி பரிமாறவேண்டும்.
English Summary
kambu vendhaya keerai rotti