பேரிடரின் பெருந்துயரம்: பருவமழையின் சீற்றத்தில் சிக்கிய ஹிமாச்சல்: இதுவரை 320 பேர் பலி, 822 சாலைகள் மூடல்..! - Seithipunal
Seithipunal


ஹிமாச்சல் பிரதேசத்தில் வரலாது காணாத அளவு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை, வெள்ளத்துடன் நிலச்சரிவு காரணமாக அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ரவி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, பல கிராமங்களை இணைக்கும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மருவமழையின் கொடூர சீற்றத்தில் சிக்கி இதுவரை 320 பேர் பலியாகியுள்ளதாகவும், பலருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 03 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 822 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பருவமழையால் ஹிமாச்சல் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அம்மாநில பேரிடர் ஆணையம் விவரங்களுடன் வெளியிட்டு கூறியிருப்பதாவது:பருவமழையின் சீற்றம் மாநிலத்தின் உள்கட்டமைப்பை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 822 சாலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. 1236 மின்மாற்றிகள், 424 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஜூன் 20 முதல் தற்போது வரை பருவமழைக்கு மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 320ஐ எட்டியுள்ளதாகவும், நிலச்சரிவுகள், திடீர் வெள்ளத்தில் சிக்கி 166 பேரும், 154 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராம இணைப்புச் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஹிமாச்சல் பிரதேச மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Monsoon rains have claimed 320 lives in Himachal Pradesh so far and 822 roads have been close


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->