ராஜ்காட்டில் சங்கமித்த தலைவர்கள்! - காந்தியின் 79-வது நினைவு நாளில் ஜனாதிபதி, பிரதமர் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி
Leaders gathered Rajghat President and Prime Minister paid emotional tributes Gandhi 79th death anniversary
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட் நினைவிடத்தில் தேசத் தலைவர்கள் திரண்டு உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தினர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தனது மரியாதையைத் தொடங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று அண்ணலின் தியாகத்தைப் போற்றினர்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளை ஒட்டிப் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
மதிப்பிற்குரிய பாபு அன்று வலியுறுத்திய 'சுதேசி' கொள்கையே, இன்று நாம் இலக்கு வைத்துள்ள வளர்ந்த மற்றும் தற்சார்பு (Atmanirbhar) இந்தியாவிற்கான அஸ்திவாரமாகும். அவரது ஒப்பற்ற ஆளுமையும், அஹிம்சை வழியிலான செயல்பாடுகளும் இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் தத்தமது கடமைப் பாதையில் தளர்வின்றி நடைபோடச் செய்யும் நித்திய உந்துசக்தியாகத் திகழும்" எனப் பதிவிட்டுள்ளார்.
English Summary
Leaders gathered Rajghat President and Prime Minister paid emotional tributes Gandhi 79th death anniversary