யார் அந்த சங்க காலத்து வீரன்? - சூர்யாவா? விக்ரமா? ஷங்கரின் 'வேள்பாரி' நாயகன் குறித்த சஸ்பென்ஸ்
Who that warrior from Sangam era Suriya Or Vikram suspense surrounding hero Shankar Velpari
'முத்து' திரைப்படத்தின் புகழ்பெற்ற வசனத்தைப் போல, ஒரு காலத்தில் தொட்டதெல்லாம் பொன்னாக விளங்கி, இந்தியத் திரையுலகின் 'பிரமாண்ட நாயகன்' என்று கொண்டாடப்பட்டவர் இயக்குனர் ஷங்கர்.
ஆனால், அவரது சமீபத்திய வெளியீடுகளான 'இந்தியன்-2' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் சரிவைச் சந்தித்தன. இதனால் 'இந்தியன்-3' படத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஷங்கர் தனது நீண்ட காலக் கனவுத் திட்டமான 'வேள்பாரி' நாவலைத் திரையில் செதுக்கத் தயாராகி வருகிறார்.

சு.வெங்கடேசனின் புகழ்பெற்ற 'வேள்பாரி' நாவலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம், மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இப்படத்தின் நாயகனாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பற்றிப் படர்ந்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கர்களான விக்ரம் அல்லது சூர்யா ஆகியோரது பெயர்கள் முன்னணியில் உள்ளன. அதேவேளை, இப்படத்தின் பான்-இந்தியா வீச்சை அதிகரிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங்கை ஒப்பந்தம் செய்யவும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மெகா புராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 'வேள்பாரி' படத்தின் மூலம் ஷங்கர் மீண்டும் தனது பழைய பாணிக்கே திரும்பி, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். 'பழைய பன்னீர்செல்வமாக' ஷங்கர் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
Who that warrior from Sangam era Suriya Or Vikram suspense surrounding hero Shankar Velpari