35 ஆண்டுகால பந்தம் பிரிந்தது... அதிகாலையில் நிகழ்ந்த சோகம்! - நிழலாய் நின்ற துணையை இழந்தார் P.T உஷா! - Seithipunal
Seithipunal


இந்திய தடகள உலகின் ஈடு இணையற்ற ராணியாகவும், தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் திகழும் பி.டி. உஷாவின் குடும்பத்தில் பெரும் சோகம் நிழலாடியுள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த சாதனை வீராங்கனையான உஷா, தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் ஸ்ரீனிவாசன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) துணை போலீஸ் சூப்பரண்டாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகப் பி.டி. உஷா தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் திக்கோடியில் உள்ள அவர்களது இல்லத்தில் தங்கியிருந்த ஸ்ரீனிவாசன், இன்று அதிகாலை எதிர்பாராத விதமாகத் திடீரென மயங்கி விழுந்தார்.

பதற்றமடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.துரதிர்ஷ்டவசமாக, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்தத் துயரச் செய்தி டெல்லியில் இருந்த பி.டி. உஷாவுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. தன் வாழ்நாள் துணையின் மறைவைக் கேட்டு நிலைகுலைந்த அவர், அவசர அவசரமாகக் கேரளாவுக்குப் புறப்பட்டார்.

பி.டி. உஷா - ஸ்ரீனிவாசன் தம்பதிக்கு உஜ்வல் விக்னேஷ் என்ற மகன் உள்ளார், அவர் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

35 year long bond broken tragedy that occurred early morning PT Usha lost companion


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->