ஏப்ரலில் ஆக்‌ஷன் ஆரம்பம்! - 2027 பொங்கல் ரிலீஸைக் குறிவைக்கும் ரஜினி-கமல் மெகா கூட்டணி...! - Seithipunal
Seithipunal


திரையுலகின் இரு துருவங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு மெகா புராஜெக்ட் மூலம் கைகோர்த்துள்ள செய்தி கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில் உருவாகும் இந்தப் பிரம்மாண்டமான படைப்பை, முதலில் சுந்தர் சி இயக்குவதாகத் திட்டமிடப்பட்டது.

ஆனால், அவர் எதிர்பாராத விதமாக விலகியதைத் தொடர்ந்து, 'டான்' பட புகழ் சிபி சக்கரவர்த்தி இந்தப் புதிய பயணத்திற்குத் தலைமை தாங்குகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படமாக (Thalaivar 173) உருவாகும் இப்படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் கசிந்துள்ளன. 2022-ல் வெளியான 'தி அவுட்பிட்' (The Outfit) எனும் புகழ்பெற்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாக இப்படம் அமையலாம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இதில் ரஜினிகாந்த் ஒரு திறமையான தையல்காரராக (Tailor) நடிக்கப் போவதாகவும், இதன் கதை 1970-களின் பின்னணியில் நகரும் வரலாற்றுத் திரில்லராக (Vintage Thriller) வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், ரசிகர்களின் பல ஆண்டுகால எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் அமையும் இக்கூட்டணியின் முதற்கட்ட படப்பிடிப்பு (First Schedule), மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action begins April Rajini Kamal mega alliance targeting 2027 Pongal release


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->