அனிருத் இசை.. சீமான் நடிப்பு.. விக்கி மேஜிக்! - பிப்ரவரியில் வெளியாகும் 'LIK' படத்தின் மெகா அப்டேட்!
Anirudh music Seeman acting and Vicky magic mega update LIK film releasing February
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) திரைப்படம், நீண்ட இழுபறிக்குப் பின் திரைக்கு வரத் தயாராகிவிட்டது.
பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத்தின் துள்ளல் இசை ஏற்கனவே ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் முற்றுப்பெற்ற போதிலும், படத்தின் வெளியீடு மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கடந்த ஆண்டு காதலர் தினம் தொடங்கி, செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 எனப் பல தேதிகள் அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில், வரும் காதலர் தினத்தை (Valentine's Day) முன்னிட்டு பிப்ரவரி மாதமே இப்படத்தைக் களமிறக்கப் படக்குழு தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 12 அல்லது 13-ஆம் தேதிகளில் 'LIK' திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. நீண்ட காத்திருப்புக்குப் பின், காதலர் மாதத்தில் இந்த 'லவ் இன்ஷூரன்ஸ்' பாலிசி ரசிகர்களுக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
Anirudh music Seeman acting and Vicky magic mega update LIK film releasing February