பண்ருட்டி அருகே அரங்கேறிய அதிரவைக்கும் கொடூரம்! - கள்ளக்காதலுக்குத் தடையான மாமனார்.. பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, முதியவர் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி ராஜேந்திரனின் மகன் உயிரிழந்த நிலையில், அவரது மருமகள் ஜெயப்பிரியா ஒருவருடன் தகாத நட்பில் இருந்துள்ளார்.

இதைக் கண்டித்த மாமனார் ராஜேந்திரனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஜெயப்பிரியா, தனது காதலனுடன் இணைந்து ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் உடல் கருகி உயிருக்குப் போராடிய ராஜேந்திரன், தற்போது கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, கள்ளக்காதல் விவகாரத்தால் சொந்த மாமனாரையே எரிக்கத் துணிந்த மருமகள் ஜெயப்பிரியா, அவரது காதலன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த இருவர் என மொத்தம் 4 பேரைக் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேந்திரனிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று, மேலதிக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Panruti father in law obstacle illicit affair doused petrol and burned alive by his daughter in law


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->