சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து...! - அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு!
Double Treat Suriya Fans New Poster Released Official Release Date
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வரும் மே 14, 2026 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதனுடன் சூர்யாவின் மிரட்டலான தோற்றம் கொண்ட புதிய போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் டீசரில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பது உறுதியானது.
ஒரு பாத்திரத்தில் வழக்கறிஞராகவும், மற்றொரு பாத்திரத்தில் ஆக்ரோஷமான தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, நட்டி, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாய் அபியங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார்.இதற்கிடையில், சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ஜூலை 2026-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜு, ரவீனா டாண்டன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
English Summary
Double Treat Suriya Fans New Poster Released Official Release Date