'மதுப்பழக்கத்தை முழுமையாக நிறுத்திவிட்டேன்'...! - மனம் திறந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் நட்சத்திர லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல், தனது கிரிக்கெட் பயணம், உடல்நலச் சவால்கள் மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிட்டது குறித்து  மனம் திறந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 172 போட்டிகளில் 221 விக்கெட்டுகளுடன் முதன்மையான பவுலராகத் திகழும் அவர், 35 வயதில் தனது உடல் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாஹல், ஆர்சிபி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகத் தெரிவித்தார்.

அந்த முக்கியமான போட்டியில் தென் ஆப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ யான்சென் இல்லாதது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், அவர் இருந்திருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்றும் சாஹல் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், தொடரின் முக்கியக் கட்டத்தில் தமக்கு ஏற்பட்ட காயமும் அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதித்ததாக அவர் வருத்தமுடன் குறிப்பிட்டார்.தனது தனிப்பட்ட வாழ்க்கை மாற்றங்கள் குறித்துப் பேசிய சாஹல், கடந்த 6 மாதங்களாக மதுப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டுள்ளதாக ஒரு நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

 நான் மதுப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டேன்.  இப்போது எனக்கு வயது 35, நான் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க விரும்புகிறேன்.மதுவை நிறுத்தியது தனது உடல் மற்றும் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இப்போது அதிக சுறுசுறுப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அணிக்குத் தனது 150 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டுமானால் சிறந்த உடல் கட்டுப்பாடும் ஆரோக்கியமும் அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

completely quit drinking Star spinner Yuzvendra Chahal opens up


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->