மக்கள் பணி செய்யத் தெரியும், ஊழல் செய்யத் தெரியாது - முதல்வர் விஜய் அதிரடி உரை! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு தவெக அரசின் கொள்கைகளையும் சட்டம் ஒழுங்கு நிலைப்பாட்டையும் எதார்த்தமாகப் பதிவு செய்தார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் கடந்த மே மாதம்தான் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அனைத்தும் புதிதாகத் தொடங்கியது போலப் பேசுவதாகச் சாடினார். கடந்த ஒன்பது மாதங்களாகச் சட்டம் ஒழுங்கு டிஜிபி இல்லாமலேயே மாநில நிர்வாகம் ரன் செய்யப்பட்டதை நினைவூட்டிய அவர், தற்போது எழுப்பப்படும் சட்டம் ஒழுங்குப் புகார்கள் அனைத்தும் மக்கள் மீதான அக்கறையால் அல்லாமல் வெறும் அவதூறு அரசியலாகவே தெரிகிறது என்றார். சட்டம் ஒழுங்கை மேம்படுத்த யாரிடம் நல்ல ஆலோசனைகள் இருந்தாலும் அதை அரசுக்குத் தாராளமாகக் கூறலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிர்வாகத் திறமை என்ற பெயரில் ஊழல் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் திறமை என்றால், அப்படிப்பட்ட நிர்வாகத் திறனை தவெக அரசு ஒருபோதும் கையாளாது என்று திட்டவட்டமாகப் பிரகடனம் செய்தார். தங்களுக்கு மக்கள் பணி செய்ய மட்டுமே தெரியும் என்றும், ஊழல் செய்யத் தெரியாது என்றும் அவர் அவையில் முழங்கினார்.

தங்கள் இயக்கத்தை நடிகன் கட்சி என்று நையாண்டி செய்தவர்களுக்கும், தங்களின் மக்கள் சந்திப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்களுக்கும் தற்போதைய தேர்தல் வெற்றிதான் சான்று என்றார். மக்கள் இயக்கத்தினர் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வென்று காட்டியவர்கள். இரு பெண் தலைவர்களைத் தங்களின் கொள்கைத் தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக தான் என்று பெருமிதம் கொண்ட அவர், பெரியாரின் கொள்கைகளை மதித்தாலும் அவரின் கடவுள் மறுப்புக் கோட்பாட்டில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கரூரில் நடந்த கொடூரமான உயிரிழப்புச் சம்பவம் தனது நெஞ்சை விட்டு எப்போதும் நீங்காது என்று உருக்கமாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், தற்போது தமிழகத்தில் நடப்பது முற்றிலும் மிகமிகச் சாமான்ய மக்களுக்கான ஒரு நேர்மையான ஆட்சி என்று உரையை நிறைவு செய்தார். இதற்கிடையே, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வருகை தந்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly We Know How to Serve Not How to Corrupt CM Vijays Decisive Speech


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->