ஜெயிலர் 2 ரிலீஸுக்கு பிறகு அனிருத் – காவ்யா மாறன் திருமணமா? இணையத்தில் பரவும் தகவல்! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோர் காதலித்து வருவதாக கடந்த சில காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் தொடர்ந்து பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில், இருவரது திருமணம் தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

அதன்படி, வரும் நவம்பர் 10ஆம் தேதி கிரீஸ் நாட்டில் destination wedding நடைபெற இருப்பதாகவும், அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வெளிநாட்டில் திருமணம் முடிந்த பின்னர் சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படலாம் என்றும், இதில் திரையுலகினர் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்களும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் குறித்து ஏற்கனவே பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், சமீபத்தில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் அளித்த பேட்டி ஒன்றும் இந்த பேச்சுகளுக்கு மேலும் வலு சேர்த்தது. இதையடுத்து இருவரது திருமணம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கிரீஸ் திருமணம், நவம்பர் 10 தேதி, சென்னை வரவேற்பு உள்ளிட்ட எந்த தகவலுக்கும் இதுவரை அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. எனவே தற்போது வெளியாகி வரும் தகவல்களை உறுதி செய்யப்படாத தகவல்களாகவே பார்க்க வேண்டியுள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அனிருத் – காவ்யா மாறன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Anirudh and Kaviya Maran get married after the release of Jailer 2 Rumors circulate online


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->