'பட்வாரா 1947' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைவிதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்..!
The Madras High Court has banned the illegal release of the film Batwara 1947 produced by actor Aamir Khan on website
நடிகர் அமீர்கான் தயாரித்துள்ள 'பட்வாரா 1947' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சன்னி தியோல், பிரீத்தி ஜிந்தா, ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, இரு நாட்டினரும் தாங்கள் விரும்பிய நாட்டில் குடியமர்வதை கதைக்கருவாக கொண்டு 'பட்வாரா 1947' படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்படுவதை தடுக்க அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள், கேபிள் டிவிகள் என 33 நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி அமீர்கான் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சௌந்தர், 'பட்வாரா 1947' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The Madras High Court has banned the illegal release of the film Batwara 1947 produced by actor Aamir Khan on website