சமூக வலைத்தளத்தில்புதியதாக முளைத்துள்ள 'திமாகி நக்சல் ஜனதா கட்சி': ராகுல், கெஜ்ரிவாலை போன்றோரை பின் தொடர்வதால் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 'திமாகி நக்சல்'மனநிலை கொண்டவர்கள் (அறிவுஜீவிகள்) குறித்து பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், எதிர்ப்பு தெரிவித்து தான் ஒரு 'திமாகி நக்சல்' என்பதில் பெருமை கொள்வதாக கூறியிருந்தார். இந்த அரசியல் மோதலுக்கு நடுவே, எக்ஸ் சமூக வலைதளத்தில் 'திமாகி நக்சல் ஜனதா கட்சி'என்ற புதிய சமூக வலைதள கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கு தற்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், யூடியூபர் துருவ் ரதி, நகைச்சுவை நடிகர் குணால் கப்ரா, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் முகமது சுபைர் உள்ளிட்ட 13 முக்கிய கணக்குகளை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறது. 

அத்துடன், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பக்கத்தில், 'முட்டாளாக இருக்காதீர்கள், கேள்வி கேளுங்கள், அடிமைத்தனத்தை ஏற்காதீர்கள்' என்று பதிவிட்டிருந்த கருத்தையும் இந்த கணக்கு மறுபதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதுகுறித்து கூறுகையில், 'பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களை 'திமாகி' நக்சல் என்று சொல்லவில்லை. நக்சல்களை ஆதரிப்பவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நிராகரிப்பவர்கள், பிரிவு 370க்கு ஆதரவாக நிற்பவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையே அவர் அப்படி குறிப்பிட்டார்.' என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் பகுதியை துண்டிக்க வேண்டும் என்று பேசிய ஷர்ஜீல் இமாமின் வீடியோவை பகிர்ந்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இதுபோன்ற நபர்களை ஆதரிப்பவர்களே 'திமாகி நக்சல்' என்று சாடியுள்ளார். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocked by the newly launched Dimagi Naxal Janta Party on social media


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->