சாப்பிட மேஜை கேட்ட இந்திய பெண் விஞ்ஞானிக்கு ஜெர்மனியில் இனவெறி அவமதிப்பு வீடியோ; மன்னிப்பு கேட்ட நிர்வாகம்..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும், சமூக வலைதள வீடியோ பதிவருமான அனன்யா, கடந்த 08 மாதங்களாகத் தங்கி பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அவர் அங்குள்ள ரோஸ்டாக் பகுதியில் அமைந்துள்ள வார்னெமுண்டே கடற்கரையில் உள்ள 'பீட்டர் பேன் பர்கர் கிரில்' என்ற பிரபல உணவகத்திற்குத் தனது தோழியுடன் சென்றுள்ளார்.

அங்கு இனவெறி பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகப் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உணவகத்தின் வரவேற்பு பகுதியில் ஊழியர் யாரும் இல்லாததால், சுமார் 05 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, அவர்கள் உள்ளே சென்று 02 பேருக்கு மேஜை உள்ளதா என்று ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த உணவக ஊழியர் ஒருவர், கோபத்துடன், 'உள்ளே வரக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா? அங்குதான் நிற்க வேண்டும். நீங்கள் வெறும் 10 செகண்ட்தான் காத்திருந்தீர்கள்; என்னிடம் பொய் சொல்லாதீர்கள்.' என்று சத்தமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

அத்துடன், மெனு கார்டை மேஜை மீது தூக்கி வீசியதுடன் மற்ற வாடிக்கையாளர்களிடம் இவர்களைப் பற்றித் தவறாகப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அனன்யா, உணவைச் சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். 

அதையடுத்து அந்த பர்கர் உணவக நிர்வாகம், நடந்த சம்பவத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் பணியாற்றுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.'என்று பதிலளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The administration apologized after a video of a racist insult was released in Germany to an Indian female scientist who asked for a table


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->