‘தங்கமே, தளபதி', ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5-இல் உங்களைச் சந்திக்கிறார்..! - Seithipunal
Seithipunal


முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஜனநாயகன்’ படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

இது குறித்து, ஜீ5 தமிழ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றுடன் தகவல் பகிர்ந்துள்ளது. அதில், 'தங்கமே, தளபதி, ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5-இல் உங்களைச் சந்திக்கிறார்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்க்கான வீடியோவில், அரண்மனை போன்ற பிரம்மாண்டமான ஒரு வீட்டில் இருந்து ஜீப் ஒன்று கிளம்புகிறது. அந்த ஜீப் கூவம், நேப்பியர் பாலத்தில் வரும்போது அதனுள் தமிழக முதல்வர் விஜய் அமர்ந்து ஜீப்பை ஓட்டுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

அந்த ஜீப் வேகமாக செல்ல, அதன் பக்கக் கண்ணாடியில் முதல்வர் விஜயின் முந்தைய படங்களின் சில கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் மாறிமாறித் வருகிறது.

ஜீப் நேராக சென்று தலைமைச் செயலகம் முன்பு நிற்க, தலைமைச் செயலகத்தின் பின்னணியில்   முதல்வர் விஜய், நடந்து வர, தற்போதைய கோட் சூட் உடையில் கம்பீரமாக முதல்வர் விஜய் நடந்து வருவது போல உள்ளது.

கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படம், சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து, ஒருவழியாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijays Jana nayagan to release on Zee5 OTT on August 21st


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->