''100 நாள் தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகனை மக்கள் ஓடவிட்டதுதான் சாதனை''; திமுக பரந்தாமன் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இந்த 100 நாள் தவெக ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பான காணொளியை திமுக வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பரந்தாமன் கூறியதாவது;

விஜய் தலைமையிலான சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியில் 100 நாட்களில் 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், போதைப்பொருள் பற்றி தகவல் தந்த மாணவர்களுக்கே பாதுகாப்பு தர முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், கொலை பழியை முதலமைச்சர் விஜய் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், விஜய் தலைமையிலான ஆட்சியில் தவெகவில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார். மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும் எனவும், இளைஞர்கள் மூலமாக ஆட்சிக்கு வந்ததாக தவெக அரசு கூறுகிறது. ஆனால், போதைப்பொருள் பற்றி மாணவர் அளித்த ஒரு தகவலை கூட உங்களால் ரகசியமாக வைக்க முடியவில்லை என்று சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

அத்துடன், 100 நாள் தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறதாகவும், அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகனை மக்கள் ஓடவிட்டதுதான் 100 நாள் ஆட்சியின் சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக முதலமைச்சர் விஜய் இருக்கிறார் என்றும், சினிமா படத்தில் நடிப்பது போல விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியினரை கைது செய்யும் ஆர்வம், குற்றவாளிகளை கைது செய்வதில் இல்லையே?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசிடம் பம்மும் முதலமைச்சர், சட்டப்பேரவையில் பாயும் முதல்வராக இருக்கிறார் எண்டுறம், சட்டம்-ஒழுங்கு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார் எனவும், இந்த ஆட்சியில் ஷாக் அடிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தவெக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும்,எதிர்க்கட்சி மீதுதான் நம்பிக்கை உள்ளது என்று கூறியதோடு, 100 நாட்களில் ரூ. 15,000 கோடி முதலீடு வந்துள்ளதாக நிதியமைச்சர் பொய்யான தகவல் கூறுகிறார். தவெக அமைச்சர்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Paranthaman criticizes that the achievement is that the law and order situation is smiling during the 100day Tvk rule


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->