உதயநிதியின் பேச்சில் புத்திசாலித்தனம் இருக்கிறது.. இதை செய்யுங்கள் கடைசிவரை நீங்கள்தான் சி.எம்.. உதயநிதியிடம் ஐடியா கொடுத்த பார்த்திபன்
There is intelligence in Udhayanidhi speech Do this and you will remain the CM until the very end Parthiban shares an idea with Udhayanidhi
தயாரிப்பாளராக திரைத்துறையில் பயணத்தை தொடங்கி, பின்னர் நடிகராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். ‘மனிதன்’, ‘சைக்கோ’, ‘நிமிர்’, ‘கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.
இதனிடையே 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி, பின்னர் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்த அவர், தனது கடைசி திரைப்படமாக மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்தில் நடித்தார். வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி, திமுக ஆட்சியை இழந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
அவர் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் பேச்சில் நிறைய புத்திசாலித்தனம் இருக்கிறது. ‘நீங்கள் உங்கள் தாத்தா மாதிரி விஷயத்தை செய்கிறீர்கள். அதில் கொஞ்சம் எம்ஜிஆரையும் சேர்த்துக்கொண்டால் கடைசிவரை நீங்கள்தான் முதலமைச்சர்’ என்று அவரிடம் சொன்னேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், உதயநிதிக்கு இருக்கும் அறிவு மற்றும் புத்திசாலித்தனத்துடன் மனிதாபிமானத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களின் பசி, அவர்களின் தேவைகள் உள்ளிட்டவற்றையும் பார்க்கும் மனநிலை இருந்தால் நீங்கள்தான் முதலமைச்சர்” என்று உதயநிதியிடம் தான் கூறியதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.பார்த்திபனின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
English Summary
There is intelligence in Udhayanidhi speech Do this and you will remain the CM until the very end Parthiban shares an idea with Udhayanidhi