அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்ட எடப்பாடி பழனிச்சாமி...!
Edappadi Palaniswami listed welfare schemes implemented during AIADMK regime
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரியலூரில் விவசாயிகளுடன் பங்கேற்று உரையாடினார்.

அப்போது அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது," அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன்களை தள்ளுபடி செய்தோம். 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் உழவன் செயலியை அறிமுகம் செய்து, பருத்தி நோய் தாக்குதலின் போது மருந்து அடிக்க பரிந்துரைத்தோம்.
மரவள்ளி கிழங்கு நோய் தாக்குதலுக்கு, மாவு பூச்சி பயிர்களுக்கு தேவையான மருந்து அடித்து பாதுகாத்தோம். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏரிகளை தூர்வாரிய போது வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்பெற்றனர்" என்று தெரிவித்தார்.
English Summary
Edappadi Palaniswami listed welfare schemes implemented during AIADMK regime