ஆன்லைன் சூதாட்ட வழக்கு: முன்னாள் எம்பி மற்றும் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்ட வழக்கில் முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி மற்றும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,000 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 'பாரிமேட்ச்' என்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பணமோசடி நடந்ததாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்க்காக பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்திக்கும் இதே வழக்கில் செப்டம்பர் 15-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate summons former MP and actress Urvashi Rautela in online gambling case


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->