அவர் மிகவும் திறமையானவர்..ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை..ஜான்வி கபூர் வருத்தம்!
He is very talented but he didn't get that Janhvi Kapoor is disappointed
''அந்த ஹீரோ மிகவும் திறமையானவர் ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என நடிகை ஜான்வி கபூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
80 காலகட்டங்களில் இருந்து இந்திய சினிமாவில் மக்களை மகிழ்வித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போன கபூரை திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் ஜான்வி கபூர் முதல் படம் நடிக்கும் போதே நடிகை ஸ்ரீதேவி திடீரென உயிரிழந்தார்,
இப்போது அவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நிறைய படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்தநிலையில் ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடித்த ''ஹோம்பவுண்ட்'' படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இப்படம் வருகிற 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் ஜான்வி கபூர் இப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், ''முதலில் இதுவும் ஒரு சாதாரண படம்தான் என்று நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பின்போதுதான் அதன் மகத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் பத்து நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டல் பெற்றபோது, இந்தக் கதை அனைவரின் இதயங்களையும் எவ்வளவு தொட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இஷான் கட்டர் நாட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் இதுவரை அவருக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்போது உலகம் அவரது நடிப்பைப் பாராட்டுவதைப் பார்த்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடினமாக உழைப்பவர்களுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதை இது எனக்கு உணர்த்தியது'' என்றார்.
English Summary
He is very talented but he didn't get that Janhvi Kapoor is disappointed