மகாராஷ்டிராவில் சோக சம்பவம்! வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி...! - 17 பேர் பலி - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்டோல் அருகேயுள்ள ரவுல்கான் பகுதியில், சுரங்க மற்றும் தொழில்துறைக்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என காவலர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த தொழிற்சாலை வளாகத்துக்குள் உள்ள டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் காலை 7 மணி முதல் 7.15 மணி இடையே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கோர விபத்தில் இதுவரை 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக நாக்பூர் நகரிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது 18 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து நடந்ததும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் சம்பவ இடத்தில் களமிறங்கி சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், மாவட்ட ஆட்சியர் விபின் இடங்கர் மற்றும் காவல் எஸ்.பி. ஹர்ஷ் போடர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விபத்துக்கான முழு காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragic incident Maharashtra Massive explosion explosives factory 17 people killed


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->