'பயம் வேண்டாம்… வெற்றி நிச்சயம்...!' - பிளஸ்-2 மாணவர்களுக்கு ஊக்கமளித்த த.வெ.க. தலைவர் விஜய்...!
Dont afraid Success certain TVk leader Vijay encouraged Plus 2 students
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு உற்சாகமாக தொடங்குகிறது. இந்த முக்கியமான தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் எதிர்காலத்தை நோக்கி முதல் முக்கிய படியை எடுத்து வைக்கின்றனர்.

இந்த நிலையில், தேர்வை எழுதும் மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளையும் ஊக்கமூட்டும் செய்தியையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
எந்த பதற்றமும், அச்சமும் இன்றி தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து எழுதுங்கள். உயர்கல்வியில் சிறந்து சாதிக்க முன்கூட்டியே என் வாழ்த்துகள்.
நீங்கள் உருவாக்கப்போகும் நாளைய சமூகம் வளமானதாக இருக்கும். நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்!”என்று உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Dont afraid Success certain TVk leader Vijay encouraged Plus 2 students