பதற்றம் வேண்டாம், நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்...!- மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு உற்சாகமாக தொடங்கியுள்ளது. இந்த முக்கியமான தேர்வை மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,“இன்று பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

எந்த பதற்றமும் இன்றி, உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் தேர்வு மையத்துக்குச் செல்லுங்கள். மகிழ்ச்சியாக தேர்வு எழுதுங்கள்.

எப்போதும் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்,”என்று உறுதியும் ஊக்கமும் தரும் வார்த்தைகளில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont nervous face it confidence Minister Anbil Mahesh wishes students


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->