விஜய் குடும்ப விவகாரம் தீவிரம்...! சமூக வலைதளத்தில் பரவும் மகன் ஜேசன் செயல் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயின் குடும்ப வாழ்க்கை மீதான தகவல்கள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது மனைவி சங்கீதா மற்றும் இரண்டு குழந்தைகள், மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஹா இவருடன் உள்ளனர்.

சினிமா வாழ்க்கை காலத்திலேயே விஜயும் குடும்பத்தினர் தனித்தனி வாழ்க்கையை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு இருபக்கமும் உடனடி மறுப்பு தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, சங்கீதா கடந்த 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜயின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, மற்றும் இம்மனு தொடர்பான விசாரணை ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.இதன் பின்னணியில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தந்தை விஜயைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளாரென தகவல் பரவியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளிவந்த பிறகே அவர் Unfollow செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், ஜேசன் தனது தந்தையின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்ந்ததற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் தற்போது எதுவும் இல்லை என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay family affair intensifies Son Jason activities spreading social media


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->