சிம்புவின் அடுத்த படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து புதிய அப்டேட் ..!
Aswath Marimuthus new update on Simbus next film
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து, நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். இந்த படத்தை ஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் , சிம்பு, 'அரசன்' படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதனால் அஸ்வத் மாரிமுத்து படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் சிம்பு படம் விரைவில் தொடங்கும் என்று அஸ்வத் மாரிமுத்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
English Summary
Aswath Marimuthus new update on Simbus next film