திமுக கூட்டணி; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெறவுள்ளது.

இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது குறித்து பேசுவதற்கு தி.மு.க.வில் 07 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் 02 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த  02 தொகுதியிலும் அக்கட்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 seats allotted to Indian Union Muslim League in DMK alliance


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->