டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள்; விராட் கோலி சாதனையை முறியடித்துள்ள பாகிஸ்தான் வீரர்...!
Farhan breaks Virat Kohli's record for most runs in T20 World Cup
10 வது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கண்டியில் நடைபெறும் வரும் சூப்பர் 08 குரூப் 02-இல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான், 08 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்துள்ளது. ஆனால், இந்த போட்டியில், 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் பாக்கிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறமுடியும். இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று முதல் இன்னிங்க்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாஹிப்சாதா ஃபர்ஹான் - பக்கர் ஜமான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. ஃபர்ஹான் - பக்கர் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதன்மூலம் ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ஃபர்ஹான் படைத்துள்ளார்.
கடந்த 2014 டி20 உலக கோப்பையின் போது விராட் கோலி 319 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஃபர்ஹான் 351* ரன்கள் அடித்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
English Summary
Farhan breaks Virat Kohli's record for most runs in T20 World Cup