அட கடவுளே! திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல..ரம்யா கிருஷ்ணனை..உதயநிதியையும் விடல.. பெரிய குண்டை போட்ட சுசித்ரா!
Trisha doesnot love Vijay not even Ramya Krishnan not even Udhayanidhi Suchitra dropped a big bomb
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா குறித்து பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இடைக்கால சறுக்கலுக்கு பிறகு ‘96’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் வலுவான கம்பேக் கொடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களால் மீண்டும் டாப் ஹீரோயினாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் ராணாவுடன் காதல், பின்னர் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் ஆகியவை நடந்தாலும், திருமணம் நடைபெறவில்லை. இதுகுறித்து திரிஷா இதுவரை வெளிப்படையாக அதிகமாக கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பின்னணி பாடகி சுசித்ரா ஒரு யூடியூப் பேட்டியில் பேசிய கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.வர் பேசுகையில், "விஜய் வேண்டுமானால் திரிஷா மீது அன்யோன்யமான காதலில் இருக்கலாம். ஆனால் திரிஷாவோ உதயநிதி மீதுதான் அன்யோன்யமான காதலில் இருக்கிறார். அவர் மட்டுமின்றி ரம்யா கிருஷ்ணன் மீதும் அன்யோன்ய காதலில் இருக்கிறார். ஆண்களில் உதயநிதி, பெண்களில் ரம்யா கிருஷ்ணன். அதேசமயம் தனுஷின் பெயரை நன்றாக திரிஷா போட்டுவிடுவார். திரிஷாவின் தனிப்பட்ட உறவுகள் குறித்து அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, சில அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயர்களை இணைத்து அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
ஆனால், இந்த கருத்துகள் குறித்து திரிஷா அல்லது குறிப்பிடப்பட்டுள்ள பிற தரப்பினரிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. சுசித்ராவின் பேச்சு தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் ஊகங்கள் பரவுவது குறித்து ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தொடர்புடையவர்கள் விளக்கம் அளிப்பார்களா என்பது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
English Summary
Trisha doesnot love Vijay not even Ramya Krishnan not even Udhayanidhi Suchitra dropped a big bomb