அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம்; வெளிநாட்டு வீரர்களின் மாற்று விமான ஏற்பாடு குறித்து ஐசிசி யோசனை..!
ICC considers alternative flight arrangements for foreign players due to war tensions between the US and Iran
10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நாளையுடன் சூப்பர் 08 சுற்று போட்டிகள் முடிவடையவுள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பல பரீச்சை நடத்தவுள்ளது. அதன்பின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி மார்ச் 08-ந்தேதி முடிவடையவுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில், தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் குறைந்தது 51 சிறுமிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரான் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் துபாயில் விமான நிலைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், உலகக் கோப்பையில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு துபாய் விமான நிலையம் முக்கிய மையமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடியும் வரை அமெரிக்கா - ஈரான் மோதல் நீடித்தால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்ப மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடுக்கான பணியை செய்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
English Summary
ICC considers alternative flight arrangements for foreign players due to war tensions between the US and Iran