இந்தியாவில் முதல் பாராளுமன்ற உறுப்பினராகும் ஓரின சேர்க்கையாளர்; யார் இந்த மேனகா குருசாமி..? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உள்ளிட்ட 10 மாநிலங்களில், காலியாகவுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து 05 மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 04 இடமும், பாஜகவுக்கு 01 இடமும் வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

அதன்படி, தங்களின் மாநிலங்களவை வேட்பாளர்களாக, அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் மாநில டிஜிபி ராஜீவ் குமார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி மற்றும் பிரபல நடிகை கோயல் மாலிக் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நால்வரில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளார். இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது. இந்த வழக்கில் மனு மானுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்களில் மேனகாவும் ஒருவர்.

இந்த தீர்ப்பிற்கு பிறகு, தனது சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

அத்துடன், தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான பல வழக்குகளிலும் அவர் வாதிட்டுள்ளார். ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் தனது எல்.எல்.எம். முடித்த மேனகா குருசாமி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரோட்ஸ் ஸ்காலர் ஆவார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு டைம் பத்திரிகை அறிவித்த உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இவரும் ஒருவராவார். மாநிலங்களவை தேர்தலில் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்குள் நுழையும் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் என்ற பெருமையை மேனகா குருசாமி பெறவுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Menaka Gurusamy becomes Indias first openly gay MP


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->