'இன்னும் 10 நாட்களில் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை தேர்தல் அறிக்கையாக தி.மு.க. வெளியிடும்'; கனிமொழி எம்.பி. தகவல்..! - Seithipunal
Seithipunal


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முழுமை பெற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்படும் என சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி இன்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருக்கிறோம். நிச்சயமாக விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், திராவிடக் கருத்துக்களை முன்னெடுத்து செல்லும் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் என்ற நம்பிக்கையாலும் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையாலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் யார் உண்மையான திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார், திராவிட மாடல் ஆட்சியை தரக்கூடியவர்கள் யார் என தெளிவாக மக்களுக்கு தெரிந்து விட்டது என்று கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன், மற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூடிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது என்றும்,  யார் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைதான் மக்கள் நம்புவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை தேர்தல் அறிக்கையாக தி.மு.க. வெளியிடும் என்று கனிமொழி மேலும் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK will release election manifesto in 10 days says Kanimozhi MP


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->