புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ரங்கசாமி பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை...! - Seithipunal
Seithipunal


புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.

அவரை கவர்னர் கைலாஷ்நாதன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்று சிறப்புசெய்தனர்.

விமான நிலையத்திலிருந்து லாஸ் பேட்டை ஹெலிபேடு மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்புள்ள 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு, ரூ.1,142.23 கோடி மதிப்பிலுள்ள 19 முக்கிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது மக்கள் மனதில் வலியும் வருத்தமும் உண்டாக்குகிறது.

பல ஆண்டுகளாக மக்கள் விரும்பும் கோரிக்கையை 13 முறை சட்டமன்றத்தில் நிறைவேற்று அனுப்பி வைத்துள்ளோம்" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடியை வரவேற்று விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமியின் உரை, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முன்பே முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மீண்டும் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தியது, பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rangaswamy personally requests Prime Minister Modi for statehood for Puducherry


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->