அவர்கள் இனி தியாகிகள்... நேபாள நாட்டின் இடைக்கால பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
Nepal Riots PM Sushila Karki
நேபாளத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை போன்ற காரணங்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதனுடன் சமூக வலைதளங்களுக்கான தடையும் இளைஞர்களின் கோபத்தை அதிகரித்தது. இதன் விளைவாக செப்டம்பர் 8 அன்று தொடங்கிய போராட்டம், போலீஸ் துப்பாக்கிச்சூட்டால் கலவரமாக மாறி 19 பேர் உயிரிழப்பிற்கு காரணமானது.
அடுத்த நாள் சமூக வலைதள தடை நீக்கப்பட்டாலும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் செப்டம்பர் 9 அன்று பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். மொத்தமாக கலவரத்தில் 72 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 159 போராட்டக்காரர்கள், 10 கைதிகள், 3 போலீஸ் அதிகாரிகள் அடங்குவர்.
இந்நிலையில் இடைக்கால அரசை அமைக்கும் முயற்சிகள் துவங்கின. ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல், ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்ட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால பிரதமராக தேர்வானார். நீதிபதியாக இருந்த காலத்தில் ஊழலுக்கு எதிராக பல தீர்ப்புகள் வழங்கியதால் இளைஞர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற சுசிலா கார்கி, கலவரத்தில் உயிரிழந்த 19 பேருக்கு தியாகி அந்தஸ்தும், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அறிவித்தார். மேலும், காயமடைந்த 134 போராட்டக்காரர்கள், 57 காவல்துறை பணியாளர்களின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்கும் எனத் தெரிவித்தார்.
English Summary
Nepal Riots PM Sushila Karki