'இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது: உலகில் தற்போது நடக்கும் அனைத்து மோதல்களுக்கும் சுயநலனே காரணம்': மோகன் பகவத் பேச்சு..!
India is on the path of development says Mohan Bhagwat
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 'அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கி, இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்கிறது என்று கூறியுள்ளார்.
அத்துடன் அவர் தொடர்ந்து பேசுகையில், மூவாயிரம் ஆண்டுகளாக உலகத்திற்கு தலைமை ஏற்று இந்தியா வழி நடத்திய போது எங்கும் மோதல் நடக்கவில்லை. உலகில் தற்போது நடக்கும் அனைத்து மோதல்களுக்கும் சுயநலனே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் அனைத்து பிரச்னைகளையும் உருவாக்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்தியா முன்னேறாது என்றும், பிரிந்து போகும் எனக்கூறினார். ஆனால், அது நடக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது, பிரிட்டன் தான் பிரிவினையின் முனையில் நிற்கிறது எனவும், நாம் பிரிய மாட்டோம். நாம் முன்னேறி செல்வோம். ஒரு முறை நாம் பிரிக்கப்பட்டோம். ஆனால், நாம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்று பேசியுள்ளார்.
அத்துடன், நம்பிக்கை அடிப்படையில் உலகம் இயங்கும் போது, செயல் ஆற்றல் கொண்ட மனிதர்களை கொண்ட நம்பிக்கையின் பூமியாக பாரதம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதாவது, வாழ்க்கை என்ற மேடையில் நாம் நடிகர்களாக இருக்கிறோம் என்றும், நாம் நமது கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும். நாடகம் முடியும் போது உண்மையான சுயம் வெளிப்படும் என்றும் கூறியுள்ளார். பாரதத்தில் நிலவும் நம்பிக்கையானது அறிவு மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
India is on the path of development says Mohan Bhagwat