12 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு தரிசனம்; பாதாள அறையில் இருந்து வெளியே எடுக்கப்படும் அத்திவரதர் சிலை..! - Seithipunal
Seithipunal


தஞ்​சாவூர் மாவட்​டம், கும்​பகோணம் பிரம்​மன் கோயில் தெரு​வில் வரத​ராஜப் பெரு​மாள் கோயில் உள்ளது. இந்த மூல​வர் சந்​நி​திக்கு கிழக்​கில் உள்ள பாதாள அறை​யில் அத்தி மரத்​தாலான, சுமார் ஒன்​றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த அத்திவரதர் சிலை 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை வெளி​யில் எடுக்​கப்​பட்​டு, பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டு, மீண்​டும் பாதாள அறைக்கு கொண்டு செல்​லப்​படும். அதன்படி, 12 ஆண்​டு​களுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து எடுக்கப்பட்டு, மார்ச் 1-ந் தேதி முதல் 10 நாட்​களுக்கு பக்​தர்​கள் தரிசனம் செய்யவதற்கான ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளது.

1915-ஆம் ஆண்​டுக்​குப் பின் பல்​வேறு காரணங்​களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்​கப்​ப​ட​வில்​லை. சுமார் 98 ஆண்​டு​களுக்கு பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்​கப்​பட்​டு, பக்​தர்​களின் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டது. பின்​னர் மீண்​டும் பாதாள அறை​யில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டது.

இந்​தநிலை​யில், 12 ஆண்​டு​களுக்​குப் பிறகு, ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை மார்ச் 01-மந் தேதி வெளி​யில் எடுக்​கப்​படவுள்ளது. சிறப்பு பூஜைகளுக்​குப் பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக வைக்​கப்பட்டு, மார்ச் 10-ந் தேதி வரை இந்த சிலையை பக்​தர்​கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகம விதி​களின்​படி காலை 08 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை, மாலை 05 மணி முதல் இரவு 08.30 மணி வரை தைலக்​காப்​பு, புஷ்ப சேவை, ஊஞ்​சல் சேவை​களை பக்​தர்​களே செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக இந்து சமய அறநிலை​யத் துறை அதிகாரி​கள் தெரி​வித்​துள்​ளனர்​.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Athi Varadhar idol to be taken out of the basement after 12 years


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->