நடிகை விஷ்ணு பிரியா தந்தை கொடூரக் கொலை: கொடைக்கானல் வீட்டில் கட்டிப்போட்டு கொள்ளையடித்து தப்பிய கும்பல்...!
Actress Vishnu Priya father brutally murdered Gang tied him up Kodaikanal house robbed him and escaped
கடந்த 2005ஆம் ஆண்டு மாயாவி திரைப்படம் வெளியாகி, அதில் சூர்யா, ஜோதிகா, ரோஜா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் மனதை நெகிழவைத்த நடிப்பை வெளிப்படுத்தியவர் விஷ்ணு பிரியா.

அந்த வேடம் அவருக்கு தனித்துவமான பாராட்டையும், திரையுலகில் நல்ல அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. பின்னர் தொடர்ந்து பல வாய்ப்புகளுடன் அவர் திரைப்படங்களில் நடித்துவரினார்.
இந்நிலையில், அவருடைய குடும்பத்தை உலுக்கும் வகையில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில், விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனை ஐந்து பேர் கொண்ட கும்பல் நாற்காலியில் அமர வைத்து கட்டிப்போட்டு, முகத்தை டேப்பால் சுற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், சிசிடிவி சாதனங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க் போன்றவற்றையும் அந்த கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Actress Vishnu Priya father brutally murdered Gang tied him up Kodaikanal house robbed him and escaped