'திருப்பூரில் பயங்கரவாத சதி… சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்த தமிழகத்தில் திமுக அரசு தோல்வி'...! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அதில்,"திருப்பூரில் பயங்கரவாதச் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 8 பேரை டெல்லி காவலர்கள் கைது செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

கொலை, கொள்ளை சம்பவங்களைத் தாண்டி பயங்கரவாத அச்சுறுத்தல் வரை நிலைமை மோசமடைந்திருப்பது, தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என விமர்சித்தார்.

மேலும், 2022-ல் கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் நினைவுகூர்ந்து, அதனை பயங்கரவாதத் தாக்குதலாக ஏற்காமல் ‘சிலிண்டர் வெடிப்பு’ என குறைத்து காட்ட முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவது தேசிய புலனாய்வு அமைப்பு போன்ற மத்திய அமைப்புகள் மூலம் தான் நடைபெறுகிறது; மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்.

டெல்லி காவலர்கள் நேரடியாக வந்து நடவடிக்கை எடுக்கும் வரை, மாநிலத்தின் ATS பிரிவு என்ன செய்தது எனவும் அவர் சாடினார். தற்போதைய ஆட்சி தொடர்ந்தால், 1998 போன்ற பெரிய அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுக்க, இந்த ஆட்சியை மாற்றுவது அவசியம் என வலியுறுத்தி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற கோஷத்துடன் தனது பதிவை முடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrorist plot Tiruppur DMK government failed Tamil Nadu where law and order disrupted eps alleges


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->