வங்கக்கடலில் அதிரடி மாற்றம்! அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை...எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு....?
Dramatic change Bay Bengal Monsoon next 24 hours Which district likely receive rain
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான உகந்த வளிமண்டலச் சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கமாக அந்தமான் கடற்பரப்பு மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் பருவமழை முன்னேற்றம் பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், தேனி மற்றும் புதுவை பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேனி, கோவை,திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பு கருதி கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடுமையான முன்னெச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dramatic change Bay Bengal Monsoon next 24 hours Which district likely receive rain