''இரவு 12 மணிக்கு மும்பை தாஜ் ஓட்டல் தகர்க்கப்படும்'' நவி போலீசுக்கு மிரட்டல் அழைப்பு; பீதியில் மும்பை நகரம்..! - Seithipunal
Seithipunal


இன்று நள்ளிரவு சுமார் 12 மணிக்கு தாஜ் ஹோட்டல் தகர்க்கப்படும் என மும்பை காவல்துறைக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களால் மறக்க முடியாத இந்த கடந்த 2008|26|11 அன்று மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான தாஜ் ஓட்டல் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு தாஜ் ஓட்டல் மீண்டும் தகர்க்கப்படும் என காவல்துறைக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளமை பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த கொடூர தாக்குதலை லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்தினர்.

அரபிக்கடலில் படகு மூலம் வந்த 10 பேர் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல், தெற்கு மும்பையில் புகுந்து பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். அதாவது தாஜ் ஹோட்டலில் மட்டும் வரவேற்பரையில் ஒன்று, லிஃப்ட்டில் இரண்டு, உணவகத்தில் மூன்று என மொத்தம் 06 குண்டுகள் வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு தாஜ் ஹோட்டலின் பிரம்மாண்ட கட்டட அமைப்பை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படைக்கும் காவல்துறைக்கும் ஆட்டம் காட்டினர். அந்த ஹோட்டலில் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் இருந்த நிலையில், கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர்.

கடந்த 1903- இல் ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்ட தாஜ் ஹோட்டல், நூற்றாண்டுக்கும் மேலாக தனது கதவுகளை மூடியதில்லை. இரண்டாம் உலகப் போரின் போது கூட அது ஒரு தற்காலிக மருத்துவமனையாக செயல்பட்டது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்களால், அதன் வரலாற்றில் முதன்முறையாக மூடப்படும் நிலைக்கு உள்ளானது. 

அதன் பின்னர், தேசிய பாதுகாப்புப் படை தாஜ் ஓட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோவை நடத்தியது. பிணைய கைதிகளாக இருந்த 200க்கும் மேற்பட்டவர்களை ஜன்னல் வழியாக ஏணி மூலம் மீட்கப்பட்டனர். அங்கிருந்த 09 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

03 நாட்கள் நடந்த நாட்டையே அதிர வைக்கும் வகையில் நடந்த அந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் தாஜ் ஹோட்டலில் மட்டும் 11 ஊழியர்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தாஜ் ஹோட்டல் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படவுள்ளதாக நவி மும்பை காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளது. அதாவது, நவி மும்பை காவல்துறைக்கு இன்று ஒரு மர்ம நபர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில், மும்பையில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நவி மும்பை காவல்துறையினர், மும்பை காவல்துறைக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மும்பை போலீசார் தாஜ் ஹோட்டல் முழுவதும் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அத்துடன், அந்த அழைப்பு யாரிடம் இருந்து, எங்கிருந்து வந்தது எனவும் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாஜ் ஹோட்டல் சுற்றி பாதுகாப்பும் பலப்படுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbais Taj Hotel to be demolished at 12 midnight Navi Police receives threat call


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->