மீண்டும் இந்தியாவில் மரண பீதி..? ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; 02 பேர் உயிரிழப்பு; பலர் மருத்துவமனையில் அனுமதி..!
2 people die due to Corona virus threatening Andhra Pradesh
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் மாநில சுகாதாரத் துறை தீவிரப் பாதுகாப்பு எச்சரிக்கையை மேற்கொள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடப்பா மாவட்டத்தில், இன்றைய நிலவரப்படி, 08 பேருக்குத் தொற்று பாதிப்பு தீவிரமாக (Active Cases) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, துரதிர்ஷ்டவசமாக இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் கொரோனா பாதிப்பு காரணமாக, கடப்பா மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி மாநில அரசு முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி (CMC) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அதேப்போன்று கடப்பா நகரில் இதர உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயது நபர் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, கடப்பா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 25 வயது மருத்துவ மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 40 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் 18 பேருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ள நிலையில், மற்றவர்களின் முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், இந்தத் தொற்று எந்த வகையான புதிய உருமாறிய வைரஸால் பரவுகிறது என்பதைக் கண்டறிய, மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு மரபணு வரிசைமுறை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலேயும், ஆந்திர மாநில மாவட்டப் பொறுப்பு அமைச்சர் சவிதா, மாவட்ட ஆட்சியர் சி.ஹெச். ஸ்ரீதர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, புதிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுப் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சளி, இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களைக் கண்டறிந்து உடனடியாகத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
2 people die due to Corona virus threatening Andhra Pradesh