முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு; திமுக ராசா மீது அரசு மருத்துவர் புகார்..! - Seithipunal
Seithipunal


திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா இழிவாக பேசியதை குற்றம் சாட்டி, பெரம்பலூர் எஸ்.பி லலித்குமாரிடம், பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ராசா மணிகண்டன் என்பவர், புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் ராசா மணிகண்டன் கூறியுள்ளதாவது;

''திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசாவும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் எம்.பி ஆ.ராசா பேசும்போது, தமிழகத்தில் அண்ணாவும், ராஜாஜியும் இருந்த பதவியில் இன்று நாதாரி தலைவர்கள் முதல்வர்களாக அமர்ந்து இருக்கிறார்கள் என்று முதல்வர் ஜோசப் விஜய்யை இழிவுபடுத்தும் படி பேசினார். இது அரசியல் நாகரிகத்திற்கு முரணானது, பொதுமக்களிடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.பொது வெளியில் ஒரு எம்.பி இப்படி பேசியிருக்கக்கூடாது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

கருத்துச் சுதந்திரத்துக்கும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் உரிய மதிப்புளிக்காமல் ஆ.ராசா பேசியுள்ளார். இது தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் செயல். எனவே பெரம்பலூர் போலீஸார், எம்.பி ஆ.ராசா மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' குறிப்பிட்டுள்ளார்.

இன்னலையில் குறித்த மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி லலித்குமார் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில், ஆனால் இதுவரை மருத்துவர் ராசா மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று எஸ்பி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government doctor files complaint against DMK Raja for speaking disparagingly of Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->