'தவெக அரசு ஆட்சியை நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ 15 லட்சம் கோடியாக இருக்கும்'; அண்ணாமலை தகவல்..!
Annamalai reports that Tamil Nadu debt will be Rs 15 lakh crore when the Tvk government completes its rule
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘We The Leaders’ விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு அண்ணாமலை பேசுகையில் கூறியதாவது;
தமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது என்றும், தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம் என்றும், நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம் என்றும், அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'வீ தி லீடர்ஸ்' அரசியல் கட்சியாக மாறப்போகிறது என்றும், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். உடனே நடக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது அண்ணாமலையின் கட்சியோ, இயக்கமோ கிடையாது. அனைவருக்குமானது என்று குறிப்பிட்டதோடு, குடி என்பது கொடிய அரக்கன். அதனை நாம் அனைவரும் இணைந்துதான் அடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டின் கடன் தொகை 10 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் இருக்கும் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 2.15 கோடி. கணக்கிட்டால் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது என்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும் என்றும், இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும் என்றும், அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும் என பேசியுள்ளார்.
English Summary
Annamalai reports that Tamil Nadu debt will be Rs 15 lakh crore when the Tvk government completes its rule