''எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் தவறாக வழி நடத்தபடுவதால் போராட்டம்''; அமைச்சர் விக்னேஷ்..!
Minister Vignesh says TASMAC employees are protesting at the instigation of opposition parties
தமிழகத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதியில் தமிழக வெற்றி கழக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதன்பின்னர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும் போது கூறியதாவது;
பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அந்த கடைகளுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட மாட்டாது. அந்த கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,பத்து ரூபாய் குறைப்பது என்பது 20 ஆண்டுகாலங்களில் மிகப்பெரிய சவால் என்றும், சில எதிர்க்கட்சியின் தூண்டுதலின் காரணமாக, சில தொழிலாளர்களை தூண்டிவிட்டு அவர்களை தவறான வழியில் கொண்டு செல்கின்றதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான தொழிலாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தயவு செய்து ''இந்த அரசு மற்ற அரசை போல் பத்து ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று சொல்லக்கூடிய அரசு கிடையாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய முதல் முயற்சி இந்த சம்பள முயற்சி என்றும், 20 ஆண்டு காலங்களாக இ.எஸ்.ஐ. காக காத்திருந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உடனடியாக கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாங்கள் எடுத்து வருகிற முன்னேற்பாடுகளில் அனைவரும் சேர்ந்துதான் இந்தத் துறையை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு, இதை விட்டுவிட்டு சிலரின் சூழ்ச்சிக்கு பலியாகி விட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அது உங்களுக்கு மிகப்பெரிய பின் விளைவை கொடுத்துவிடும் என்றும், மது இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவது தான் தவெகவின் நோக்கம் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Vignesh says TASMAC employees are protesting at the instigation of opposition parties