வானில் பறந்தபோது நேர்ந்த விபரீதம்! குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்...! - இருவர் பலி
plane crashed residential area Two people died
அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள அக்ரான் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், அக்ரான் ஃபல்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பைப்பர் பிஏ-28 வகை ஒற்றை எஞ்சின் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து கேன்டர்பரி சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானம் வீடு மீது விழுந்த உடனேயே பெரும் தீப்பரவல் ஏற்பட்டது. விமானமும், குடியிருப்பு வீடும் கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் பதற்ற சூழல் நிலவியது.
இந்த விபத்து நேரத்தில் வீட்டில் இருந்த தம்பதியரும், அவர்களது இரு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தில் பயணித்த இருவர் தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் சிலர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயங்கர விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
plane crashed residential area Two people died