விஜய்- ராகுல் காந்தி ஒரே மேடையில் சேர்ந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் பதறும்...! - நாஞ்சில் சம்பத் சவால்
If Vijay Rahul Gandhi joins same platform dmk shocked Nanjil Sampath Challenge
தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசியார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் திரளும் மக்கள் வெள்ளம் அபூர்வமானது; தனது 39 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இதுபோன்ற மிகப்பெரிய ஆதரவை பார்த்ததே இல்லை என்றார்.

விஜய்க்கு தமிழகமெங்கும் கிடைக்கும் வரவேற்பு, மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.75 ஆண்டுகளாக வேரூன்றி நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் விஜய் களத்தில் இறங்கியுள்ளார்; அதனால் திமுக குழப்பத்தில் உள்ளது என்றும் விமர்சித்தார்.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கும் ஒரே கட்சி த.வெ.க தான் எனவும் தெரிவித்தார்.மேலும், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால் தனது அரசியல் செல்வாக்கை இழக்க நேரிடும் என்றார்.
வைகோ ஏற்கனவே திமுக அணியில் சேர்ந்துள்ளதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் கூட திமுகவுடன் நிரந்தர உறவு குறித்து தெளிவாக பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மார்ச் 9-ஆம் தேதி திருச்சியில் திமுக நடத்தும் மாநாட்டுக்கு எதிராக தங்கள் தரப்பில் “அரசியல் அதிரடி” காத்திருக்கிறது; ராகுல் காந்தி மற்றும் விஜய் ஒரே மேடையில் தோன்றினால் அது திமுகக்கு பெரிய அரசியல் அதிர்ச்சியாக அமையும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
English Summary
If Vijay Rahul Gandhi joins same platform dmk shocked Nanjil Sampath Challenge